ETV Bharat / sukhibhava

அப்படி பண்ணாதீங்க.. முடி கொட்டிடும்.. 9 கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்.. - முடி உதிர்வு எப்படி தடுக்கலாம்

முடி உதிர்வு தடுப்பதற்கான முயற்சிகளில் நீங்கள் ஈடுபடும்போது அது பற்றிய கட்டுக்கதைகள் உங்களை கலக்கமடைய செய்யலாம். இந்த கட்டுக்கதைகளை பற்றியும் அதன் உண்மைகளையும் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

முடி கொட்டிடும்
முடி கொட்டிடும்
author img

By

Published : Mar 13, 2023, 5:47 PM IST

சென்னை: தினமும் தலைக்கு குளித்தால் தலைமுடி கொட்டிவிடும், எண்ணெய் தடவாமல் விட்டால் கொட்டிவிடும் என்று பல கட்டுக் கதைகளை உண்மையென நம்பியிருப்போம். அப்படி பரவிய 9 கட்டுக்கதைகள் மற்றும் அதன் உண்மைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  • கட்டுக்கதை 1: தினமும் தலைக்கு குளித்தால், முடி உதிர்வு ஏற்படும்.

உண்மை: தினமும் தலைக்கு குளிப்பதால் முடி கொட்டிவிடாது. நாள்தோறும் வெளியில் செல்லும்பட்சத்தில் முடியில் மாசு படிந்துவிடும். அதனால் தினமும் தலைக்கு குளிக்கலாம் அல்லது தண்ணீரில் கழுவலாம். ஆனால், தொடர்ந்து சுடு தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. முடிக்கு சல்பேட் இல்லாத மைல்டு ஷாம்பூவைப் பயன்படுத்த வேண்டும்.

  • கட்டுக்கதை 2: கோடையில் ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் முடி வேர்களில் சுரக்கும் எண்ணெய் பசையாகும்.

உண்மை: கோடை காலத்தில் அதிகப்படியான வெயில் மற்றும் நீச்சல் குளங்களின் குளிக்கும்போது குளோரின் காரணமாக முடி வறண்டு சேதமடைகிறது. இந்த நேரத்தில் ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். வெளியில் செல்லாதப் பட்சத்தில் தேவைப்பாடாது.

  • கட்டுக்கதை 4: கோடைக்காலத்தில் முடிக்கு எண்ணெய் பயன்படுத்தினால் பிசுபிசுப்பு ஏற்படும், வேர்களை அடைக்கும்.

உண்மை: முடி வேர்களில் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, எண்ணெய் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். அப்போது, முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். சொல்லப் போனால், எண்ணெய் பயன்படுத்துவது முடியை உள்ளே இருந்து வலுப்படுத்துகிறது.

  • கட்டுக்கதை 5: அடிக்கடி உங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை மாற்றக் கூடாது.

உண்மை: உங்கள் ஷாம்பு அல்லது கண்டிஷனரை மாற்றுவது என்பது நீங்கள் வசிக்கும் இடம் மற்றும் காலநிலையை பொறுத்தது. அதற்கேற்ப தோல் மருத்துவரின் ஆலோசனையின்படி பொருத்தமான ஷாம்பு மற்றும் கண்டிஷனரை மாற்றிப் பயன்படுத்தலாம்.

  • கட்டுக்கதை 6: முடிக்கு எண்ணெய் தடவினால் பொடுகு சரியாகிவிடும்.

உண்மை: பொதுவாக பொடுகு பூஞ்சையால் ஏற்படுகிறது. தலைக்கு எண்ணெய் தடவுவது மூலம் சரியாகி விடாது. அதற்கு பதிலாக, ஆன்டி-பொடுகு ஷாம்பூவைப் பயன்படுத்தினால், சரியாகும்.

  • கட்டுக்கதை 7: கோடையில் ஹீட் ஸ்டைலிங் முடியை அதிகமாக சேதப்படுத்துகிறது.

உண்மை: கோடையில் மட்டுமல்ல, வருடத்தின் எந்த நேரத்திலும் ஹீட் ஸ்டைலிங் தலைமுடியை சேதப்படுத்தும். எந்தவொரு ஹீட் ஸ்டைலிங் கருவிகளையும் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் முடியில் ஈரப்பதத்ததை தக்கவைக்கும் கண்டிஷனர் அல்லது எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும்.

  • கட்டுக்கதை 8: எண்ணெய் தடவாமல்விட்டால் முடி கொட்டும்.

உண்மை: தலை முடிக்கு எண்ணெய் தடவுவது சிறந்த ஒன்றாகும். ஆனால், எண்ணெய் தடவாமல் விட்டால் முடி கொட்டும் என்பது உண்மையல்ல. தேவைப்படும்போது அல்லது முடி வறண்டு காணப்படும்போது எண்ணெய் பயன்படுத்தலாம்.

  • கட்டுக்கதை 9: கோடையில் முடி வளராது.

உண்மை: கோடை காலங்களில் முடியின் வளர்ச்சி குறையும் என்று கட்டுக்கதை உள்ளது. ஆனால், முடி வளர்ச்சியில் 10-15 சதவீதம் கோடையிலேயே அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படிங்க: தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விளக்குகளை அணைத்தால் கர்ப்பகால நீரிழிவு நோய் அபாயம் குறையும்: ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.