ETV Bharat / sukhibhava

கண் பாதுகாப்பில் வெள்ளரி; என்னென்ன நன்மைகள் இருக்குன்னு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 6:19 PM IST

Cucumber health benefits for eyes in Tamil: கண் பாதுகாப்பிற்கும், பராமரிப்பிற்கும் வெள்ளரிக்காயின் பங்கு அலாதியானது. தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நமது உடல் உறுப்புகளிலேயே மிகவும் சென்சிடிவானது கண்கள். இதன் மீது அதிக கவனிப்பு தேவை. கண்களின் ஆரோக்கியம் என்றாலே நமக்கு கேரட் தான் நினைவுக்கு வரும். கண் குறித்த பிரச்சினை எதுவானாலும், கேரட் சாப்பிட வேண்டும் என்று வீட்டில் உள்ள பெரியவர்களும், மருத்துவர்களும் வலியுறுத்திக் கேட்டிருப்போம். ஏனெனில் கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகளவு உள்ளன. கண்களின் பாதுகாப்பிற்கும், பராமரிப்புக்கும் கேரட்டை தவிர இன்னொரு காய்கறி உள்ளது. அது தான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய் கண்களின் ஆரோக்கியத்திற்கும், பராமரிப்பிற்கும் பெரிதும் உபயோகப்படுகிறது.

வெள்ளரியில் விட்டமின்கள், தாதுக்கள் உள்ளன

வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்:

  • சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளரிகாயின் அறிவியல் பெயர் Cucumis Sativus. 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ள வெள்ளரிக்காய், நம் உடலுக்கு தேவையான நீரேற்றத்தை வழங்குகிறது. மேலும் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளன.
  • கண்பார்வைக்குத் தேவையான விட்டமின் ஏ சத்து வெள்ளரியில் உள்ளன. வெள்ளரியில் உள்ள பீட்டா கரோட்டின் மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. கண் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
  • வெள்ளரியில் உள்ள விட்டமின் சி, கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். வயதாகும் போது கண்களில் ஏற்படும் பிரச்சினைகளையும் சரி செய்கிறது.
  • வெள்ளரியில் உள்ள விட்டமின் கே, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, கண் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • வெள்ளரியில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை கண் அழுத்த நோய் (Glaucoma) போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க வேண்டுமா? மலச்சிக்கலா? அப்போ இதை கண்டிப்பா சாப்பிடுங்க!

கண் ஆரோக்கியத்தில் வெள்ளரியின் பங்கு:

வெள்ளரியில் உள்ள நீர்ச்சத்து கண்களுக்குத் தேவையான நீரேற்றத்தை வழங்குகிறது. கண்களில் வறட்சி, எரிச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. வட்டமாக நறுக்கிய வெள்ளரித் துண்டை கண்களில் வைப்பதால் கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்கும். கண்களுக்கு குளிர்ச்சி தரும். கண்கள் சோர்வடைவதைத் தடுக்கிறது.

உணவில் வெள்ளரி:

  • சாலட்களில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வெள்ளரியை சேர்த்து உண்ணலாம்.
  • ஊட்டச்சத்து நிறைந்த ஸ்மூத்திஸ்களில் வெள்ளரியை சேர்த்துக் கொள்ளலாம்.
  • நீரில் வெள்ளரி துண்டுகளைச் சேர்த்து, டீடாக்ஸ் வாட்டர் போல் அருந்தலாம்.
  • வெள்ளரியை ஜூஸ் ஆக அருந்தலாம்.

இதையும் படிங்க: Spices For Weight Loss Tips In Tamil: அஞ்சறைப் பெட்டிக்குள் இப்படி ஒரு ரகசியமா? இது தெரியாம போச்சே.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.