ETV Bharat / sukhibhava

கரோனாவுக்குப் பிறகு குழந்தைகள், கர்ப்பிணிகளிடையே சர்க்கரை நோய் அதிகரிப்பு! - கர்ப்பகால நீரிழிவு நோய்

கரோனா பரவலுக்குப் பிறகு குழந்தைகளிடையே டைப்-2 நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாகவும், கரோனா காலத்தில் கர்ப்பகால நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Covid
கொரோனா
author img

By

Published : Jun 18, 2023, 5:50 PM IST

நியூயார்க்: கரோனா பரவலுக்குப் பிறகு டைப்-2 நீரிழிவு நோயால் (Type-2 diabetes) பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, அமெரிக்காவில் நடைபெற்ற எண்டோ 2023 (ENDO 2023) என்ற மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது. இதே கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றொரு ஆய்வறிக்கையில், முந்தைய ஆண்டுகளை விட, கரோனா காலத்தில்தான் கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதில் முதல் ஆய்வை ஓஹியோ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அதில், கரோனா பரவிய முதல் ஆண்டில், குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதது, விளையாடாமல் சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பலாக இருத்தல், அதிகளவு சிற்றுண்டிகள் சாப்பிட்டதால் உடல் பருமன் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கரோனா பரவலுக்குப் பிறகு இளைஞர்களிடையேயும் டைப்-2 நீரிழிவு நோய் அதிகரித்துள்ளது. கரோனா பெருந்தொற்று பரவிய முதல் ஆண்டில், இளைஞர்களிடையே டைப்-2 நீரிழிவு நோய் ஒப்பீட்டளவில் 24.8 சதவீதமாக இருந்ததாகவும், மூன்றாவது ஆண்டில் அது 32.1 சதவீதமாகவும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு, கரோனா கட்டுப்பாடுகள், வாழ்க்கையில் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே காரணமாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான எஸ்தர் கூறும்போது, "டைப்-2 நீரிழிவு நோய் அதிகரிப்புக்கான காரணங்கள் முழுமையாக தெரியவில்லை. எனவே, மரபணு காரணிகள், உடல் பருமன், சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றை கொண்ட நமது இளைஞர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் தென்படும்போது, மருத்துவரை அணுகும்படி அறிவுறுத்த வேண்டும்" என்று கூறினார்.

கர்ப்பகால நீரிழிவு நோய் தொடர்பான இரண்டாவது ஆய்வை, ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். இதில், கரோனாவுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடந்த 14,663 பிரசவங்களை குழு ஆய்வு செய்தது. அதேபோல், கரோனாவுக்குப் பிறகான இரண்டு ஆண்டுகளில் நடந்த பிரசவங்களையும் ஆய்வு செய்தது. இரண்டையும் ஒப்பிட்டதில் கரோனா காலத்திலும் அதற்குப் பிறகும் கர்ப்பகால நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிலும், கரோனாவின் முதல் ஆண்டைவிட இரண்டாவது ஆண்டில் மேலும் அதிகரித்ததாக தெரிகிறது. கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் கர்ப்பிணிகள் மீதான தாக்கத்தை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுவாக குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது, டைப் 2 நீரிழிவு நோய் உண்டாகிறது.

இதையும் படிங்க: Super Foods: ஜங்க் ஃபுட்ஸை விடுங்க, சூப்பர் ஃபுட்ஸை சேருங்க...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.