ETV Bharat / sukhibhava

கூச்சம் தகர்த்து மருத்துவர் ஆலோசனையைப் பெறுவோம், புற்றுநோயை வெல்வோம்! - கூச்ச நாச்சங்களை தவிர்த்து மருத்துவர் ஆலோசனையை கேட்டால் தானே புற்றுநோயைக் கண்டறியலாம்

நடப்பு மாதமான அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் மட்டுமல்லாமல் இந்திய அரசும் இது குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டி வருகிறது

கூச்ச நாச்சங்களை தவிர்த்து மருத்துவர் ஆலோசனையை கேட்டால் தானே புற்றுநோயைக் கண்டறியலாம்!

author img

By

Published : Oct 22, 2020, 5:01 PM IST

நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் இவையெல்லாம் தாண்டி கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக சுகாதார அமைப்பு 1985ஆம் ஆண்டு தொடங்கி, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவித்து அதனைக் கடைபிடித்து வருகிறது. நடப்பு மாதமான அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் மட்டுமல்லாமல் இந்திய அரசும் இது குறித்த விழிப்புணர்வை பெண்களிடம் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டி வருகிறது.

கூச்ச நாச்சங்களை தவிர்த்து மருத்துவர் ஆலோசனையை கேட்டால் தானே புற்றுநோயைக் கண்டறியலாம்!

இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈடிவி பாரத் சுகிபாவா (உடல்நலம்) குழுவினர், மும்பை மோர்பாட் புத்ரானி அறக்கட்டளையின் உளவியலாளரும் முன்னாள் புற்றுநோய் ஆலோசகருமான காஜல் யு டேவ்வுடன் கலந்துரையாடினர்.

42 வயதான சுதா என்ற பெண்மணி, கண்ணீர் பொங்க தன்னுடைய மருத்துக ஆவணங்களுடன் ஆலோசகரின் அறைக்குள் நுழைகிறார். அறையினுள் சில நிமிடங்கள் மௌனமே மொழியாக பரிமாறப்படுகிறது. தொடர்ந்து, ஆலோசகர் அந்த மௌன மொழியை தகர்த்தெரிந்து, சுதாவிடம் அங்கு வந்ததற்கான காரணத்தைக் கேட்கிறார்.

இந்நிலையில், நடப்பதை விளங்கிக் கொள்ள முடியாத சுதா, தன் கையிலிருக்கும் மருத்துவச் சீட்டுகளை ஆலோசகரிடம் கொடுத்து, தன்னுடை உடல் நலம் குறித்து விவரிக்கிறார். பின்னர் மருத்துவர், சுதாவை ரத்த மாதிரிகள், மேமோகிராஃபி ஆகியவற்றை எடுத்துவரச் சொல்கிறார்.

மார்பக புற்றுநோயிலிருந்து மீள்வோம்
மார்பக புற்றுநோயிலிருந்து மீள்வோம்

இரண்டு குழந்தைகளின் தாய், ஒரு கடின உழைப்பாளியான இல்லத்தரசி என இப்படி சுதாவின் பரிணாமங்கள் அழகானவை. இருந்தபோதிலும் தான் சோதனைக்கு உட்படுத்தப்படும்போது அவர் பயப்படுகிறார். ஏன், மனதளவில் சிதைந்தார் என்றே சொல்லலாம். அவரது எண்ண ஓட்டங்கள் “என் பிள்ளைகளுக்கும் எனக்கும் என்ன நேரிடுமோ? எனது குடும்பத்தை நான் எவ்வாறு கவனித்துக் கொள்ளப் போகிறேன்?” என்பதை சுற்றியே இருந்தன.

இந்நிலையில் இவையனைத்தையும் கவனித்த ஆலோசகர், மெதுவாக அவருக்கு ஆலோசனைகளை வழங்கத் தொடங்குகிறார். பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் புற்றுநோய் கட்டாயம் இருக்கும் என்று அர்த்தமில்லை. சுதாவின் குடும்பத்தில் புற்றுநோய் உள்ளவர்கள் இருந்ததால்தான், அவருக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோயை குணப்படுத்த பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. ஆனால், அவையனைத்தும் ஆரம்பத்திலேயே புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தால் மட்டுமே சாத்தியமாகும். இவற்றையெல்லாம் கேட்டு மனதளவில் உறுதியான சுதா, தற்போது மருத்துவப் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கிறார்.

சுதாவைப் போன்று பல பெண்கள் இங்கு இருக்கின்றனர். இது போன்று முன்கூட்டியே தங்களை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருக்கிறது. அதுமட்டுமின்றி நாம் பலவற்றை இன்றளவும் உணராமல்தான் இருக்கிறோம். புற்றுநோய் என்பது ஆட்கொல்லி நோயல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நிச்சயம் அதனை குணப்படுத்த முடியும்.

மார்பக புற்றுநோயிலிருந்து மீள்வோம்
இதுவும் கடந்து போகும்...!

சில தவறான புரிதல்களை உடைத்தெறிவோம்...

  • கட்டுக்கதை : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
  • உண்மை : புற்றுநோய், ஒரு தொற்று நோய் அல்ல. கட்டி அல்லது புற்றுநோய் செல்கள் உடலுக்குள் உருவாகின்றன. மேலும் இது வைரஸ் அல்லது பாக்டீரியா போல் பரவாது.
  • கட்டுக்கதை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துவிடுவார்.
  • உண்மை : புற்றுநோயிலிருந்து மீண்டுவந்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்கள் இங்கு பலர் உள்ளனர்.
  • கட்டுக்கதை : ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால் அவர் குழந்தைகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
  • உண்மை : முன்பு கூறியதுபோல் இது தொற்றுநோயல்ல. எனவே இது அவர்களை பாதிக்காது, பரவவும் செய்யாது.
  • கட்டுக்கதை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது.
  • உண்மை : பெண் மருத்துவரின் ஆலோசனை, வழிக்காட்டுதலின்படி இதனை எதிர்கொள்ளலாம்.

இப்படி பல புரளிகளும் கட்டுக்கதைகளும் நம்மைச் சுற்றியும், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தும் உள்ளன. இவற்றை அப்படியே நம்பாமல் தெளிந்து மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று, அறிவார்ந்த வாழ்க்கையை வாழப் பழகுவோம்.

இதையும் படிங்க...மழைக்கால மழலை பராமரிப்பு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.