ETV Bharat / sukhibhava

’குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மசாஜ் தேவை’ - பாடி மசாஜ்

குழந்தைகளின் உடலை மசாஜ் செய்வது மிக முக்கியமான செயல்பாடு. இது குறித்த விவரங்களுக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர் ராஜலெட்சுமி மாதவத்திடம் பேசினோம்.

’ஆரோக்கியமான குழந்தைக்கு மசாஜ் தேவை’
’ஆரோக்கியமான குழந்தைக்கு மசாஜ் தேவை’
author img

By

Published : Aug 13, 2020, 8:05 PM IST

குழந்தை கருத்தரிப்பது தொடங்கி அக்குழந்தை வளர்ந்து தன்னிச்சையாக இயங்கும் வரையிலும் குழந்தையின் பெற்றோர் பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர். அந்த வகையில் குழந்தைகளின் உடலை மசாஜ் செய்வது மிக முக்கியமான செயல்பாடு. இதனால் குழந்தைகளின் எலும்புகளும், தசைகளும் வலுப்பெறும். இந்த மசாஜ் குறித்த விவரங்களுக்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர் ராஜலெட்சுமி மாதவத்திடம் பேசினோம்.

”பிறந்து ஒரு வார காலத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாம். மெதுவான அழுத்தத்துடனும் மிகுந்த கவனத்துடனும் இந்த மசாஜை செய்ய வேண்டும். பிறந்த குழந்தையிடன் உடல் இலகுவான அமைப்போடு இருக்கும் என்பதால் அதிக கவனம் தேவை. இதைச் செய்வதற்கு முன்பாக மருத்துவரிடம் முறையான ஆலோசனைப் பெறுவது அவசியம்” என்றார் மருத்துவர் ராஜலெட்சுமி.

பலன்கள்

சோர்வை நீக்கும்

ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்

பருவ மழைக்காலத்தில் குழந்தைகளின் செரிமானம் மந்தமாக இருக்கும். இதனை மசாஜ் துரிதப்படுத்தும்.

குழந்தைகளின் பசியைத் தூண்டும்

குழந்தைகளின் தோல் அமைப்பை மேம்படுத்துகிறது

குழந்தைகளின் தலை முடி வளர்ச்சியை அதிகரிக்கும்

தசைகள், எலும்பு இணைப்பு வலுப்பெறும்

நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும்

சில தோல் நோய்களில் இருந்து முன்கூட்டியே பாதுகாப்பளிக்கும்

மசாஜ் செய்யும் படிநிலைகள்

குழந்தையின் உடலில் எந்த பாகத்திலிருந்து மசாஜ் செய்ய வேண்டும் என மருத்துவர் ராஜலெட்சுமி ஒவ்வொரு படிநிலைகளாக விளக்குகிறார்.

  1. தலை
  2. பாதம்
  3. கை மற்றும் கால்
  4. வயிறு மற்றும் மார்புப்பகுதி
  5. முதுகு
  6. “இது போன்ற மசாஜ் வெறும் உடல் சார்ந்த விசஷம் அல்ல. இதனால் தாய்க்கும், குழந்தைக்குமான உணர்வுப்பூர்வமான பந்தம் உருவாகும். குறிப்பாக, அக்டோபர் முதல் ஜனவரி வரை மாதம் வரை வாரத்தின் ஏழு நாள்களிலும் மசாஜ் செய்வது அவசியம்”

என்னென்ன ஆயில் பயன்படுத்தலாம்?

  • தேங்காய் எண்ணெய்
  • நல்லெண்ணெய்

ஆயுர்வேத எண்ணெய் வகைகள்

  • பால தைலம்
  • பால அஸ்வகந்தா தைலம்
  • சந்தன் பால தைலம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். இருப்பினும், ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அவசியம்.

நினைவில் கொள்ள வேண்டியது?

  1. எண்ணெயில் மசாஜ் செய்யும் போது குழந்தையின் அனைத்து உறுப்புகளிலும் கவனம் செலுத்துவது முக்கியம். அடிவயிறு, மார்புப் பகுதி, முதுகில் மசாஜ் செய்யும் போது அதிக கவனம் தேவை.
  2. நாள்தோறும் 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். குழந்தைக்கு உணவளிக்கும் முன்னர் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் (அ) குழந்தை உணவெடுத்துக் கொண்ட 1 மணி நேரத்திற்கு பின்னர் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும்.
  3. ஒருவேளை இருமல், ஜலதோஷம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் நலக்குறைபாடு குழந்தைக்கு ஏற்பட்டிருந்தால் மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  4. மசாஜ் செய்ய மிதமான சூட்டில் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் குளிக்கும் முன்னர் மசாஜ் செய்தால் உடல் நலம் மேம்படும். ஆயுர்வேதத்தின்படி இது தினசரி வழக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்வதால் நுண்குழல் ரத்தவோட்டம் மேம்படும்.

இதையும் படிங்க:இனி ரயிலில் மசாஜ் செய்து கொள்ளலாம் - ரயில்வே அமைச்சகம் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.