சென்னை: எல்லாருக்கும் எளிமையாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம். வாழைப்பழத்தை உண்ணாத மக்களே இருக்க மாட்டார்கள். ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட விலையும் குறைவு. அதனாலோ என்னவோ இதன் மகத்துவம் யாருக்கும் தெரியவில்லை. வாழைப்பழத்தில் பழத்தை தின்று விட்டு நாம் தூக்கி எறியும் தோலிலும் அநேக நன்மைகள் உள்ளன.
வாழைப்பழத் தோல் நமது தோலின் பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது. கொஞ்சம் விநோதமாக தோன்றினாலும் இது தான் உண்மை. வாழைப்பழத்தோலில் சருமத்திற்கு தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை எப்படி பயன்படுத்துவது, இதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
முக சுருக்கங்களை நீக்க: வாழைப்பழத் தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து போன்றவை உள்ளன. இவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்திற்கு நல்ல இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.
முகம் பளபளப்பாக: வாழைப்பழத் தோல், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு உதவும். இதன் விளைவாக முகம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
முகப் பரு பறந்து போகும்: வாழைப்பழத் தோலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் முகப்பருவை நீக்கும். மேலும் முகப்பருவினால் ஏற்பட்ட வடுவையும் நீக்கும்.
இளமையான சருமத்திற்கு: வயது முதிர்ச்சியின் காரணமாக சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் ஏற்படும். வாழைப்பழத் தோலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதன் காரணமாக முகத்தில் உள்ள கோடுகள், சுருக்கங்கள் மறைந்து, சருமம் இளமையான தோற்றத்தைப் பெறும்.
கரும்புள்ளிகளை அகற்றும்: சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் அதாவது பிக்மென்டேஷன் போன்றவை இருக்கும். இதை சரி செய்ய வாழைப்பழத் தோலை முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி சருமம் சீராக இருக்கும்.
கருவளையங்களை போக்கும்: கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கும், அதிக நேரம் மொபைல் உபயோகப்படுத்துபவர்களுக்கும் கருவளயங்கள் ஏற்படும். வாழைப்பழத் தோலை இதை பயன்படுத்தி சரி செய்யலாம். வாழைப்பழத் தோலை இரண்டு துண்டுகளாக வெட்டி, அதை ஃப்ரிட்ஜில் வைக்கவும். அரை மணிநேரத்திற்கு பின் வாழைப்பழத் தோலை கண்களுக்குக் கீழே வைத்தால், கண்கள் சோர்வின்றி, புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதைத் தொடர்ந்து செய்து வர கருவளையமும் நீங்கும்.
பயன்படுத்துவது எப்படி: வாழைப்பழத்தை சாப்பிட்ட பின், அதன் தோலில் உள்ள சதையை சருமத்தில் நன்றாக செய்த்து கொடுக்க வேண்டும் 15 முதல் 20 நிமிடங்கள் முடிந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம். அதேபோல வாழைப்பழத் தோலை வைத்து ஃபேஸ் மாஸ்க் தயாரித்து முகத்தில் தேய்ப்பதன் மூலம் முகம் ஷைனிங் ஆவதுடன் இறந்த செல்கள் அகற்றப்பட்டு, சூரிய கதிர்களால் ஏற்படும் முகப்பொலிவிழப்பும் தடுக்கப்படும்.
வாழைப்பழத் தோல் ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி? இரண்டு வாழைப்பழத் தோலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இரண்டு துண்டு வாழைப் பழமும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு டீ ஸ்பூன் தயிர் மற்றும் அரிசிப் பொடியை சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அதை எடுத்து உங்கள் முகத்தில் தடவி 30 நிமிடம் முடிந்த பிறகு கழுவி விடுங்கள். இதை குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்துப் பயன்படுத்தக்கூடாது.
இதையும் படிங்க: மாதவிடாய் வலியா.. இத ட்ரை பண்ணி பாருங்க.. வலி போயே போய்டும்!