ETV Bharat / sukhibhava

நடுராத்திரியில் பசி எடுக்கிறதா? - உங்களுக்கு ஒரு எச்சரிக்கை! - இரவு பசி எடுக்க காரணம் என்ன

How To Prevent Night Hunger: இரவு தூக்கத்திற்கு நடுவே பலருக்குப் பசி வயிற்றைக் கிள்ளும். இது எதனால், ஆரோக்கியத்துடன் இது எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 8:08 PM IST

சென்னை: பசி ருசி அறியாது என்பார்கள். ஆனால், இங்கு பலருக்குப் பசியால் தூக்கம் அறியாமல் போய்விட்டது. காலம், கலாச்சாரம், வாழ்வியல் பழக்க வழக்கம் என அனைத்தும் மாறும்போது நோய்களும் புதுவிதமாக மாற்றம் பெறவில்லை என்றால் எப்படி? ஆனால் ,நோய்கள் தானாக உருவாவதில்லை. அதற்கு முழு முக்கால் காரணமும் நாமாகத்தான் இருப்போம்.

அப்படித்தான் இரவு தூக்கத்திற்கு நடுவே, அதாவது விடியற்காலை இரண்டு மணி, மூன்று மணிக்கெல்லாம் பசி எடுக்கும் உணர்வு பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு வழிவகை செய்யும் என்கிறார்கள், மருத்துவர்கள். தூக்கத்திற்கு நடுவே பசி எடுக்கக் காரணம் என்ன என்றால், இரவு உணவுக்கு முன்பு நொறுக்குத் தீனி சாப்பிடுவதுதான் என்பதே பதில்.

இதையும் படிங்க: குறட்டை பிரச்னைக்கு இதுவும் காரணமா? - மூக்கு எலும்பு வீக்கத்தால் வரும் தொல்லை

இனிப்புகளை எடுத்துக்கொள்வது, துரித உணவுகளை உண்பதால் வயிறு முழுமையாக நிரம்பாமலும், சத்தான உணவு உடலுக்குச் சென்றடையாமலும் இருக்கும். அது மட்டுமின்றி அந்த நாள் முழுவதும் பகல் நேரங்களில் நீங்கள் உட்கொள்ளும் உணவு 80 சதவீதம் சத்தானதாகவும், 20 சதவீதம் ருசியானதாகவும் இருக்க வேண்டும்.

ருசி என்பது வயிறு நிறைய உண்பதற்கு உறுதுணையாக இருக்கும். சத்தான உணவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். ஆனால், நம்மில் பலர் 80 சதவீதம் ருசியையும், 20 சதவீதம் சத்தான உணவையும் தேடித் தேடி உட்கொள்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் பசி எடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் ஒரு முழு மட்டன் பிரியாணியைக் கொடுத்தாலும் அப்படியே சாப்பிட்டு விடும் அளவுக்குப் பசி இருக்கும்.

இதையும் படிங்க: புற்று நோயாளிகள் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன?.. ஆய்வில் வெளியான தகவல்.!

இது ஆரோக்கியமானது என நினைத்து அந்த நேரத்தில் நீங்கள் உணவு உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த பசியின் காரணமாக தூக்கமின்மை, சர்க்கரை நோய், அதீத உடல் எடை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

மேலும், இரவு நேரத்தில் பசி எடுக்க மற்றொரு காரணம், உங்கள் உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் மாற்றமும், உளவியல் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகளும்தான் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில். இதை சரி செய்ய வாழ்வியல் முறையில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சத்தான உணவை நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுதல், சரியான உறக்கத்தை உறுதி செய்வது, நாள்தோறும் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுதல் சிறந்தது.

இதையும் படிங்க: World Rose Day 2023: புற்று நோயாளிகளுக்கு ரோஜாவை பரிசளித்த மெலிண்டா ரோஸ்.. அன்பைப் பகிருங்கள் ஆயுளை வெல்லுங்கள்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.