ETV Bharat / sukhibhava

அரிய வகை எலும்புப் புற்றுநோய்க்கு வெற்றிகர சிகிச்சை: சென்னை அப்போலோ மருத்துவமனை சாதனை!

அப்போலோ மருத்துவமனை, ’ஆஸ்டியோசர்கோமா’ எனப்படும் அரிய வகை எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு முழுவதுமாக தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

அரிய வகை எலும்புப் புற்றுநோய்க்கு வெற்றிகர சிகிச்சை

author img

By

Published : May 19, 2021, 10:15 PM IST

சென்னை: அப்போலோ மருத்துவமனை இந்த கரோனா பொருந்தொற்றுக் காலத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு முழுவதுமாக எலும்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது. கடுமையாக நோயுற்று பலவீனமடைந்த நிலையில், படுத்த படுக்கையாக இருந்த 11 வயது குழந்தைக்கு, சென்னை, அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தக் குழந்தையால் நடக்க முடிகிறது.

வங்கதேசத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தை, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது அதனால் நடக்க முடியவில்லை. பிறருடைய உதவியின்றி அந்தக் குழந்தையால் தனது அன்றாடப் பணிகள் எதையும் செய்ய முடியவில்லை. அந்தக் குழந்தைக்கு இடது தொடை எலும்பில் ஆஸ்டியோசர்கோமா எனப்படும் எலும்புப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது எலும்புகளை பாதிக்கும் ஒரு அரிய வகைப் புற்றுநோயாகும்.

இந்தப் பாதிப்பு பொதுவாக உடலில் மிகப்பெரிய எலும்புகளிலேயே ஏற்படும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்கதேசத்தில் அந்தக் குழந்தை கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கூடுதல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்படடார்.

ஆஸ்டியோசர்கோமா பாதிப்பு பொதுவாக நீண்ட எலும்புகளின் முடிவில் ஏற்படும். பெரும்பாலும் முழங்கால் மூட்டைச் சுற்றியும், சில சமயங்களில் இடுப்பு, கைகளைச் சுற்றியும் ஏற்படும். ஆஸ்டியோசர்கோமாக்கள் பொதுவாக பெரிய வகைக் கட்டிகள் என்பதால் இவற்றுக்கு கடுமையான சிகிச்சை முறை தேவை. நோயின் ஆரம்பக் கட்டங்களில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கட்டி மற்ற உறுப்புகளுக்கு வேகமாக பரவக் கூடும். அதனால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் கூடிய நிலை உண்டாகும்.

முன்பு இந்த நோய் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் குழந்தைகள் நீண்ட காலம் வாழ எலும்புக் கட்டிகளை நீக்க மூட்டை அகற்றுதல் மட்டுமே ஒரே வழியாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ’மாடுலர் புரோஸ்தோசிஸ்’ எனப்படும் நவீன துல்லிய செயற்கை உறுப்புகள், நவீன அறுவைசிகிச்சைத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், மூட்டு அகற்றப்படாமல் சிகிச்சை அளிக்கும் உத்திகளை வழங்கியுள்ளன.

இது உறுப்பை அகற்றும் நிலையைத் தவிர்க்க வழிவகுக்கிறது. ஆனால் இப்போதும்கூட ’ஸ்கிப்’ எனப்படும் இடைவெளி, விரிசல் அல்லது பெரிய அளவிலான எலும்பு சேதத்துடன் கூடிய அதிக அளவிலான வீரியம் மிக்க தொடைக் கட்டிகள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.

இதற்கு முழுவதுமான தொடை எலும்பு மாற்று (டி.எஃப்.ஆர்) சிகிச்சை ஒரு சிறந்த உத்தி என்று கருதப்படுகிறது. இது தொடை எலும்பின் வலிமையை மீட்க உதவுவதுடன் நோயாளிகள் ஆரோக்கியத்துடன் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கிறது.

இந்நிலையில், இக்குழந்தை முழு தொடை எலும்பு மாற்று (டி.எஃப்.ஆர்) அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. இது ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால் இதற்கு மிகவும் பயிற்சி பெற்ற நிபுணர் தேவை. பல மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையின்போது, மருத்துவர் சங்கர், இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, அவரது உடலில் இருந்து தொடை எலும்புகளை கவனமாக அகற்றி, ஒரு ’புரோஸ்தெடிக்’ எனப்படும் செயற்கை எலும்பை மாற்றி சிகிச்சை அளித்துள்ளார். மாற்றப்பட்ட எலும்புக்காக முடிந்தவரை திசுக்களை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த நடைமுறை குறித்து பேசிய மூத்த ஆலோசகரும், எலும்பியல் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் சங்கர், சாதாரண சூழ்நிலைகளில், ”’டிஸ்டல் ஃபெமர்’ எனப்படும் நீளமான தொடை எலும்புகளில், ஆஸ்டியோசர்கோமா புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டால் கட்டியை அகற்றி, அகற்றப்பட்ட பகுதிக்கு பதிலாக புரோஸ்தெசிஸ் எனப்படும் செயற்கை எலும்பு மாற்றப்படுவதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிஇடி சிடி (PET CT) ஸ்கேன் செய்தபோது, அதே தொடை எலும்பின் மேல் பகுதியில் மற்றொரு கட்டி இருப்பதைக் கண்டோம். உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. எனவே, மூட்டைக் காப்பதற்காக அடுத்தக்கட்ட சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தோம். இந்தக் கட்டத்தில் சரியான புரோஸ்தெசிஸ் எனப்படும் செயற்கை எலும்பைப் பெறுவது ஒரு சவாலாகவே இருந்தது. வளரும் குழந்தை என்பதால் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப பின்னர் அந்த புரோஸ்தெசிஸும் வளரும்.

எனவே சரியான புரோஸ்தெசிஸைப் பெற வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது. மேலும், முழு தொடை எலும்பும் மாற்றப்பட்டவுடன், இடுப்பு மூட்டிலிருந்து புரோஸ்தெசிஸ் எனப்படும் செயற்கை எலும்பு இடம்பெயர்வதைத் தடுக்க நல்ல மென்மையான திசு புணரமைப்பு பெறுவதையும் உறுதி செய்தோம். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய சங்கர், “கால்களுக்கு ரத்தம் வழங்கும் நரம்புகள், இரத்த நாளங்களை தனிமைப்படுத்தி எங்களால் பாதுகாக்க முடிந்தது. எதிர்காலத்தில் இடுப்பு எலும்பு இடப்பெயர்வைத் தடுக்க இடுப்பு மூட்டைச் சுற்றி ஒரு சிறப்பு பை கொண்ட கட்டமைப்பையும் ஏற்படுத்தினோம்.

”அக்குழந்தை ஒரு வாரத்திற்குள் வீடு திரும்பியது. பயாப்ஸிக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள், முழு கட்டியும் அகற்றப்பட்டதை உறுதிசெய்தது. மேலும் கீமோதெரபி சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்ததும் தெரிய வந்தது. எந்தவொரு சிக்கலும் இல்லாமல் காயம் நன்றாக குணமானது. திட்டமிட்டபடி, அவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் கீமோதெரபி கிடைக்கிறது.

அவர் படிப்படியாக காலில் வலிமையை மீண்டும் பெறுகிறார். தற்போது எந்த ஆதரவும் இல்லாமல் நடந்து வருகிறார். கீமோதெரபி சிகிச்சை முடிந்ததும் அவரது உடல் நலம் மேலும் மேம்பட்டு நல்ல வாழ்க்கைத் தரம் அமையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

இந்த மருத்துவ முறை குறித்த மேற்படி விவரங்களுக்கு www.proton.apollohospitals.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.