ETV Bharat / sukhibhava

மலேரியாவுக்கு எதிரான புதிய ஆன்டிபாடி சோதனை நிறைவு..

ஆப்பிரிக்காவில் மலேரியாவுக்கு எதிரான புதிய ஆன்டிபாடி சோதனையின் முடிவு வெளியாகி உள்ளது.

மலேரியாவுக்கு எதிரான புதிய ஆன்டிபாடி சோதனை நிறைவு..
மலேரியாவுக்கு எதிரான புதிய ஆன்டிபாடி சோதனை நிறைவு..
author img

By

Published : Nov 1, 2022, 12:50 PM IST

ஆப்பிரிக்காவில் 2020ஆம் ஆண்டில் 6,20,000க்கும் அதிகமான மக்கள் மலேரியா நோயால் உயிரிழந்தனர். அதேநேரம் 241 மில்லியன் மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டனர். இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம். இதனிடையே உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த மலேரியா தடுப்பூசி 30% செயல்திறன் கொண்டதாக வெளிவந்தது.

மேலும் இதனை நான்கு டோஸ்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் யு.எஸ்.நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த், புதிய ஆன்டிபாடி சோதனைக்காக மலேரியா அதிகமாக தாக்கும் ஆப்பிரிக்காவின் மாலியில் உள்ள கிராமங்களான கலிஃபபோகோ மற்றும் டுரோடோ ஆகியவற்றில் வசிக்கும் மக்களை சோதனைக்கு உட்படுத்தியது.

இவர்கள் வாரத்திற்கு இரு முறையாவது மலேரியா கொசுக்களால் தாக்கப்படுகின்றனர். மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆன்டிபாடிகளைக் கொண்டு மலேரியா தடுப்பு ஆன்டிபாடிகளை இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயார் செய்துள்ளனர்.

இதன்படி, மாலியில் உள்ள 330 பேருக்கு இரண்டு விதமான ஆன்டிபாடி மருந்துகள் மற்றும் போலி ஆன்டிபாடிகள் ஆகியவை செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இந்த நேரத்தில் மலேரியா கொசுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கொசுவலை மற்றும் உரிய தடுப்பான்களும் வழங்கப்பட்டன.

இந்த சோதனையின் முடிவில், அதிக அளவு டோஸ் உட்கொண்டவர்களில் 88% மாதிரிகளுக்கு அதிகளவிலான தடுக்கும் திறனை ஆன்டிபாடி கொடுத்திருந்தது. மேலும் சற்று குறைவான டோஸ்களினால் 75% மாதிரிகளுக்கு ஆன்டிபாடி சற்று குறைவான பாதுகாப்பை கொடுத்திருந்தது.

தற்போது இதுகுறித்த ஆராய்ச்சி அறிக்கை நேற்று (அக் 31) நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆப் மெடிசின் என்ற இதழில் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: கேன்சர் செல் அறிகுறிகளைக் கண்டறியும் புதிய கருவி கண்டுபிடிப்பு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.