சமீபத்திய நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவது நமது குடலின் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் என்பது தெரிய வந்துள்ளது. லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பாதாம் சாப்பிடுவது குடலுக்கு எவ்வாறு நன்மைகளை தருகிறது என்பதை பற்றி ஆராய்ந்தனர்.
நமது குடலில் ஆயிரக்கணக்கான சிறிய அளவு நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் நம்முடைய ஜீரணத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றன. அதேவேளையில் இதனால் நம் உடலுக்கு சில பாதிப்புகளும் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் செயல்பாடுகளை ஆராய்ந்ததில், சில வகையான உணவுவகைகளை உட்கொள்ளும் போது அது இந்த நுண்ணுயிரிகளை கட்டுப்பாட்டில் வைத்து சிறந்த முறையில் பராமரிக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் எற்கனவே ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீணிகளை உட்கொண்டு வரும் 87 நபர்களைத் தேர்வு செய்து 3 அணிகளாகப் பிரித்தனர். ஒரு அணியினர் ஒரு நாளைக்கு 56 கிராம் பாதாமை உட்கொண்டனர். மற்றொரு அணியினர் தினமும் 56 கிராம் நிலக்கடலையை உட்கொண்டனர். மூன்றாவது அணியினர் தினமும் மஃபின்ஸை உட்கொண்டனர். இந்த ஆய்வு 4 வாரம் தொடர்ந்தது.
இதில், பாதாம் உட்கொண்டவர்களின் குடலின் ’புடிரேட்’ எனச் சொல்லப்படும் ஓர் ஆசிட் மஃபின்ஸ் உட்கொண்டு வந்தவர்களைக் காட்டிலும் அதிகரித்து இருந்தது ஆய்வாளர்களுக்குத் தெரியவந்தது. இது குடலின் நுன்னுயிரிகளை வளம்பெறச் செய்கிறது. மற்றவைகளை உட்கொண்டவர்களை விட பாதாமை உட்கொண்டவர்களே அவர்களின் குடல் வளத்தில் பலன் பெற்றதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வேண்டாம்; கண் மருத்துவர் எச்சரிக்கை..!