ETV Bharat / sukhibhava

தீபாவளியன்று சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியவை...! - தீபாவளீ

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தீபாவளியை ஆரோக்யமான தீபாவளியாகக் கொண்டாட சில வழிமுறைகள்

தீபாவளியன்று சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டியவை...!

author img

By

Published : Oct 22, 2022, 12:54 PM IST

ஐதராபாத்: வரவிருக்கும் தீபாவளி பண்டிகையையில் சந்தோஷமும், உற்சாகமும் நீடிக்க வேண்டுமென்றால் பண்டிகையை பாதுகாப்புடனும், ஆரோக்கியமான முறையிலும் கொண்டாடுவது அவசியம். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த மாதிரியான பண்டிகை காலங்களில் தங்களின் உடல்நலத்தை பேணுவது அவசியம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதியெங்கும் ஸ்வீட் திண்பண்டங்களின் விற்பனை நிறைந்திருக்கும்.

அதே வேளையில், பண்டிகைக் காலங்களில் ஸ்வீட், பலகாரங்கள் செய்யும் பழக்கங்கள் நம் நாட்டில் உண்டு. அத்தகைய சூழலில் இயல்பாகவே மூளை அந்தத் திண்பண்டங்களை நோக்கிச் செல்ல ஆசையைத் தூண்டும். ஆனால், இப்படி செய்வது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். மருத்துவர்களின் கருத்துபடி தீபாவளிக்குப் பிறகு சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதைத் தாண்டி இன்னும் சில சிக்கல்களும் சர்க்கரை நோயாளிகள் இதனால் சந்திக்க நேரிடும்.

இதுகுறித்து மருத்துவர் சமீர் சிங் கூறுகையில், “தீபாவளியன்று மக்கள் அனைவரும் அவர்களுக்குள் ஸ்வீட் பரிமாறிக் கொள்வது வழக்கம். அவர்களது அன்றாட உணவுகளில் ஸ்வீட், குளிர் பானங்கள், காரசாரமான உணவுகள் என அனைத்தும் அதிகரிக்கும். இது சாதாரண மனிதர்களுக்கே பிரச்சனையை ஏற்படுத்தும் பொழுது, சர்க்கரை நோயாளிகளுக்கு மோசமான விளைவுகளையே தரக்கூடும். குறிப்பாக, குழந்தைகள், மற்றும் முதியவர்கள் இதைத் தவிர்ப்பது நன்று.

மேலும், தீபாவளி பண்டிகைக் காலங்களில் காலப்பருவ மாற்றம், மாசு, மற்றும் சில காரணங்களால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இவையும் சர்க்கரை நோயை மோசமாக்கக் கூடும். உணவுக்கட்டுப்பாடு மட்டுமின்றி தினசரி வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிலும் கவனம் கொள்ளவேண்டும். ரீஃபைண்டு சர்க்கரை மற்றும் மைதா சர்க்கரை நோய்க்கு ஆபத்தான உணவுகள். ஆனால், சுவையான பல உணவுகள் இந்த மைதாவில் தான் செய்யப்படுகின்றன. இந்த மாதிரியான பண்டிகைக் காலங்களில் அவற்றை தவிர்ப்பது நன்று. அதற்கு பதில் கோதுமையை பயன்படுத்துவது நன்று.

சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தில் தயாரித்த ஸ்வீட் பண்டங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதிலும் சர்க்கரை நோயாளிகள் எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதை அவர்களது மருத்துவர்களிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது. ஸ்வீட் பண்டங்களை விட பேரிட்சை, உலர் திராட்சைகளை உட்கொள்வது உடல்நன்மைக்கு விளைவிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்தப் பண்டிகைக் காலத்தில் உறவினர்கள் இல்லங்களுக்குச் செல்லும் போது அங்கு பரிமாறப்படும் டீ, காபி, குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக, சர்க்கரை இல்லாத எலிமிச்சை ஜூஸ், போன்றவற்றைப் பருகிக்கொள்ளலாம். பொதுவாக தீபாவளி பண்டிகை காலங்களில் நண்பர்களுடன் பார்ட்டி செய்வதும் வழக்கம். அப்போது மதுபானங்களும் வழங்கப்படும். அது பார்ட்டியின் சந்தோஷத்தை பெருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் அவை உடல் நலத்தை பாதிப்பதை யாரும் உணர்வதில்லை” என்றார்.

இதையும் படிங்க: குடல் ஆரோக்கியத்திற்கு தினம் ஒரு கை பாதாம்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.