ETV Bharat / sukhibhava

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சைக்கு உயிரியல் மருந்து!

ஹைதராபாத்: கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் எதிர்ப்பு மருந்து தொடர்பான ஆய்வில் தேசிய சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

National Institutes of Health  COVID-19 treatment  Coronavirus news  Antiviral drug  Anti-inflammatory drug  நோய் எதிர்ப்பு மருந்து  தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் ஆய்வு  கரோனா பாதிப்பு, கோவிட்-19

author img

By

Published : May 12, 2020, 8:34 AM IST

Updated : May 21, 2020, 4:52 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிலியட் சயின்சஸ் இன்க் இன் ஆன்டிவைரல் மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

இந்த ஆய்வின் நோக்கம், “ரெமெடிசிவிர் (உயிரியல் மருந்துகளால் உருவாக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஆன்டிவைரல்), பாரிசிடினிப் அழற்சி எதிர்ப்பு சிகிச்சை ஆகியவற்றின் கலவையை உருவாக்குவதாகும்.

இதற்கான பணிகளை தேசிய சுகாதார நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தச் சோதனை எதிர்ப்பு மருந்துகள் தற்போது அமெரிக்காவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் அந்தோணி ஃபௌசி, “இந்த ஆய்வு அழற்சி எதிர்ப்பு முகவரை ரெமெடிசிவரில் சேர்ப்பதால் இறப்பைக் குறைப்பது உட்பட கூடுதல் நன்மைகள் உள்ளதா? என்பதையும் ஆராய்வோம். கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை மீட்கும் நேரத்தை ரெமெடிவிர் ஒரு சாதாரண அளவிற்கு குறைகிறது என்பதைக் காட்டும் உறுதியான தரவுகள் தற்போது எங்களிடம் உள்ளது” என்றார்.
எலி லில்லி அண்ட் கோ நிறுவனத்தால் ஒலுமியண்ட் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படும் பாரிசிடினிப் தடுப்பு மருந்துகள், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சாத்தியமானதாக உள்ளதா? என்று சோதிக்கப்பட்டது.

கரோனா வைரஸால் ஏற்படும் சுவாச நோய்களுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசிகளோ இல்லாததால், ரெம்டெசிவிர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

ரெம்டெசிவிர் 200-மில்லிகிராம் (மி.கி) ஒரு மாத்திரையாக (டோஸ்) அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் 100-மி.கி ஒருமுறை என தினசரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காலத்திற்கு 10 நாள்கள் என மொத்த சிகிச்சை வரை இந்த தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.

பாரிசிட்டினிப் 14-நாள் மொத்த சிகிச்சையின் படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காலத்திற்கு 4-மி.கி என வாய்வழி அளவாக நிர்வகிக்கப்படுகிறது. ரெமெடிசீவருடன் மட்டும் ஒப்பிடும்போது, நோயிலிருந்து மீள்வதற்கான நேரம் குறைவானதா என்பதை மதிப்பீடு செய்வார்கள்.

இந்த சோதனை, நோயின் இரண்டாம் நிலை விளைவு மற்றும் இறப்பு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கும். இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அபாயத்தைவிட பலன் அதிகமான இருப்பதால், கோவிட்-19 க்கு சிகிச்சைக்கு இந்த மருந்தை அங்கீகரித்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: 'கரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே தீர்வு'- அமெரிக்க இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்

Last Updated : May 21, 2020, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.