விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆகாசப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் தனிமையில் வாழ்ந்துவருகிறார்.
மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த தமிழ்ச்செல்வன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இரண்டு முறை கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, அருகிலிருந்தவர்களால் மீட்டப்பட்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆகாசம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் பார்க்க: மருத்துவமனையில் உயிரிழந்த இளம்பெண் : உடலை வாங்க மறுத்த உறவினர்கள்!