ETV Bharat / state

260 மி.கிராம் தங்கத்தில் டார்ச்லைட் உருவாக்கிய நகைக்கடை தொழிலாளி! - விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த நகைக்கடை தொழிலாளி 260 மில்லி கிராம் தங்கத்திலான டார்ச்லைட்டை வடிவமைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் வழங்கினார்.

டார்ச்லைட் உருவாக்கி உலக சாதனை
டார்ச்லைட் உருவாக்கி உலக சாதனை
author img

By

Published : Mar 4, 2021, 1:11 PM IST

திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடை வீதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2007 ஆண்டு உலகிலேயே மிகச்சிறிய தங்கத்தினால் ஆன செஸ் போர்டு செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

பின்னர் 110 கிராம் எடையில் வெள்ளியிலான இருசக்கர வாகனம், 163 கிராம் எடையில் சிறிய மின்விசிறி, 4 கிராமில் தங்க மோதிரத்தில் வாட்ச் மற்றும் 16 மில்லி மீட்டர் நீளம் 11 மில்லி மீட்டர் அகலத்தில் உலகிலேயே இல்லாத அளவில் திருக்குறளை பொறித்து லிம்கா உள்ளிட்ட பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் 260 மில்லி கிராமில் எடையில் தங்கத்திலான டார்ச்லைட் செய்துள்ளார். இதனை புதுச்சேரியில் உள்ள அசிஸ்ட் உலக சாதனைக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில், புதுச்சேரி அசிஸ்ட் அமைப்பு தங்கத்திலான டார்ச்லைட்லை உலக சாதனை என அறிவித்து, அதற்குரிய சான்றிதழ்களும் அளித்தது.

டார்ச்லைட் உருவாக்கி உலக சாதனை

அதனைத் தொடர்ந்து மணிகண்டன் இந்தத் தங்கத்தினாலான டார்ச் லைட்டை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு பரிசாக வழங்க முடிவு எடுத்தார். இதையடுத்து சென்னையில் அவரை சந்தித்து மணிகண்டன் தங்கத்திலான டார்ச்லைட்டை கமல்ஹாசனிடம் வழங்கி பாராட்டுகளை பெற்றார்.

இதையும் படிங்க: அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.