ETV Bharat / state

#EXCLUSIVE 'காவல்துறை, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச முகக் கவசம்' - சாய்ராம் அறக்கட்டளை அசத்தல் - விருதுநகர் மகளிர் குழுக்கள் தயாரிக்கும் முகக் கவசம்

விருதுநகர்: மருத்துவ பணியாளர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்களுக்கு சாய்ராம் அறக்கட்டளை சார்பாக இலவசமாக முகக் கவசம் வழங்கப்படுகிறது. இதற்கென மகளிர் குழுக்கள் மூலமாக முகக் கவசம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Sairam foundation to provide free face maskd for police, cleaners in virudhunagar

author img

By

Published : Apr 15, 2020, 8:49 PM IST

Updated : May 1, 2020, 12:16 PM IST

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தின் தடுப்பு நடவடிக்கையாக இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ள நிலையில், உலகம் முழுவதும் முகக் கவசம் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்தி வரும் சாய்ராம் அறக்கட்டளை மாவட்டத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களை இணைத்து முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் மகளிர் குழுக்களின் வீடுகளுக்குச் சென்று மூலப் பொருட்கள் கொடுத்து முகக் கவசம் தயார் செய்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மகளிர் குழுக்கள் மூலமாக முகக் கவசம் தயாரிக்கும் பணி

இதுவரை 1.5 லட்சம் முகக் கவசம் தயாரித்து விநியோகித்துள்ளனர். மேலும் மருத்துவ பணியாளர்கள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த முகக் கவசம் தயாரிப்பின் மூலம் தங்களுடைய வாழ்வாதார தேவைகளுக்கு வருமானம் போதுமானதாக கிடைக்கிறது என இங்கு மாஸ்க் தயாரிக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியே செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் பட்டாசு தொழிலாளர்கள்!

Last Updated : May 1, 2020, 12:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.