தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், நூறு விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதி, மேலரத வீதி சந்திப்பில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும், ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் 4 ரத வீதிகள் வழியாக 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பெண்கள் பேரணியாகச் சுற்றிவந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: மகளிர்களுடன் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட மதுரை ஆட்சியர்