ETV Bharat / state

மதுக்கடையை மூடக்கோரி வட்டாட்சியரை சிறைப்பிடித்த பெண்கள்! - மதுபானக்கடை

விருதுநகர்: மதுபானக் கடையை மூடக்கோரி 3 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் வட்டாட்சியரின் காரை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

tasmac
tasmac
author img

By

Published : Mar 5, 2021, 5:26 PM IST

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாவாலி கிராமத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கோயில்கள், பள்ளி வளாகங்கள் உள்ளப் பகுதியில் புதிதாக மதுபானக்கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, அவர்களின் நல்லொழுக்கம் சீர்கெடும் என்பதால், மதுபானக் கடையை திறக்கக் கூடாது எனக்கூறி, அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்களிடம் பேச்சு நடத்திய அரசு அலுவலர்கள், முறையான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், மீண்டும் கடையை திறக்கும் பணி நடந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடையின் முன்பு அமர்ந்து கடந்த 3 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் மதுவிலக்கு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

மதுக்கடையை மூடக்கோரி வட்டாட்சியரை சிறைப்பிடித்த பெண்கள்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அங்கிருந்து செல்ல முயன்ற வட்டாட்சியரின் காரை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, மதுவிலக்கு வட்டாட்சியரை காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு பரபரப்பு நிலவியது.

இதனிடையே மதுபானக்கடையை முற்றிலும் அகற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தை தொடரப் போவதாக, 300க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! - கார் உரிமையாளர் குழப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.