ETV Bharat / state

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - காவல் துறை விசாரணை!

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே பெண் ஒருவர் தண்ணீர் பிடித்துவிட்டு, ஈர கையுடன் மின்மோட்டாரின் மின்சாரத்தை துண்டிக்கும்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Breaking News
author img

By

Published : Jun 24, 2020, 9:38 PM IST

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைப் பகுதியிலுள்ள நாகலிங்க நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(56). இவருக்கு ராணி(50) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ராணி நேற்றிரவு (ஜூன் 23), தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மின்சார மோட்டாரைப் பயன்படுத்தியுள்ளார்.

பின்னர் மின்மோட்டாரின் மின்சாரத்தை துண்டிக்கும் போது, கையில் உள்ள ஈரம் பட்டு மின்சாரம் தாக்கி, கீழே விழுந்துள்ளார்.

மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்து பார்த்த ரவிச்சந்திரன், ராணி கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அலறியுள்ளார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் உடனடியாக, ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ராணியைப் பரிசோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர், பெண்ணின் உடலைக்கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.