ETV Bharat / state

திருமணம் செய்து ஏமாற்றிய போலீஸ் கணவர்! - மனைவி தர்ணா! - போலீஸ் கணவரை எதிர்த்து மனைவி தர்ணா

விருதுநகர்: காவல்துறையில் பணிபுரியும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மனைவி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

dharna
dharna
author img

By

Published : Nov 19, 2020, 8:11 PM IST

சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாதவி (29). இவரும் அதே பகுதியில் வசிக்கும் முனியசாமி என்பவரும் கடந்த 2010 ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். அப்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்த முனியசாமிக்கு, 2014 ஆம் ஆண்டில் காவல்துறையில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பின்பும் மாதவியுடன் தொடர்பில் இருந்த முனியசாமி, அவர் கர்ப்பம் ஆனது தெரிந்ததும் நழுவ ஆரம்பித்துள்ளார். முனியசாமியின் குடும்பத்தினரும் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர்.

இதனையறிந்த மாதவி 2014 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரையடுத்து, காவலர் முனியசாமி மாதவியை திருமணம் செய்து காவலர் குடியிருப்பில் இரண்டாண்டு காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், அதன் பின்பு வீட்டுக்கு செல்வதை முனியசாமி நிறுத்தியதால், குடும்பத்தை நடத்த முடியாமல் மாதவியும், குழந்தையுடன் தன் தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டி பல இடங்களில் மனு கொடுத்தும், கணவர் காவலராக பணிபுரிவதால், காவல்துறையில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மாதவியும் அவரது அம்மா பரமேஸ்வரியும் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் சாத்தூர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று சமாதானப் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத்தகராறால் மனைவியை கொலை செய்தாரா கணவர்? போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.