ETV Bharat / state

மனைவியை அடித்துக் கொன்ற கணவர் காதலியுடன் கைது - மனைவியை கொன்ற கணவர் கைது

விருதுநகர் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

illicit affair  wife murdered by her husband  wife murdered by her husband because of illicit affair  virudhunagar news  virudhunagar latest news  crime news  murder news  murder case  விருதுநகர் செய்திகள்  மனைவியை அடித்துக் கொன்ற கணவர்  மனைவியை கொன்ற கணவர்  மனைவியை கொன்ற கணவர் கைது  விருதுநகரில் மனைவியை கொன்ற கணவர் கைது
மனைவியை கொன்ற கணவர்
author img

By

Published : Aug 15, 2021, 12:22 AM IST

விருதுநகர்: குல்லூர்சந்தையைச் சேர்ந்தவர் நாகமுத்து(33). இவருக்கு நிர்மலா(30) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். நிர்மலா இலங்கையைச் சேர்ந்த தமிழர். நாகமுத்துக்கும் நிர்மலாவுக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் நாகமுத்துவிற்க்கு, வேறு சில பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

மனைவி அடித்துக் கொலை

இதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நிர்மலா தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து விருதுநகரில் உள்ள தனது உறவினா் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகமுத்து தனது மனைவியுடன் சமரசம் செய்து, குல்லூர்சந்தையில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியைக் கூட்டி வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் தனது கணவர் வேறு பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்த நிர்மலா கணவா் நாகமுத்துவிடம் அதுகுறித்து கேட்டு உள்ளார்.

அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையில் நாகமுத்து நிர்மலாவை கட்டையால் தாக்கி உள்ளார். இதில் நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலை எரித்து சாம்பலை தண்ணீரில் கரைத்த கணவன்

இறந்து போன நிர்மலாவின் உடலை வீட்டின் அருகில் உள்ள தகர கொட்டகையில் வைத்து நாகமுத்து எரித்து உள்ளார். பின்னர் சாம்பலை குல்லூர்சந்தை அணைபகுதியில் கரைத்து உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தனது சகோதரியை காணவில்லை என நிர்மலாவின் அண்ணன் மூா்த்தி நாகமுத்துவிடம் கேட்டு உள்ளார்.

அதற்கு நாகமுத்து முறையாக பதில் சொல்லாததால் சந்தேகம் அடைந்ந மூா்த்தி, தனது சகோதரி நிர்மலாவை காணவில்லை என அருகில் உள்ள சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காதலியுடன் கைது

புகாரின் அடிப்படையில் நாகமுத்துவை சூலக்கரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் திருமணத்தை மீறிய உறவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட சண்டையில், தனது மனைவியை அடித்து கொன்றதை நாகமுத்து ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சூலக்கரை காவல் துறையினர் நாகமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நாகமுத்துவின் காதலி முனியம்மாள் (32) என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பத்திர எழுத்தாளர் வீட்டில் 16 பவுன் தங்க நகைகள், ரூ. 1.5 லட்சம் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.