தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே வாக்காளர்களுக்கு சமூக அக்கறையை ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கண்ணன் கையெழுத்து இயக்கத்தை இன்று (மார்ச் 4) தொடங்கிவைத்தார். அப்போது அவருடன் மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் அவர்கள் தேர்தலில் நியாயமாகவும் நேர்மையாகவும் ஜனநாயகக் கடமையை 100 விழுக்காடு நிறைவேற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முதல் கையெழுத்திட்டார்.
இதையும் படிங்க: வாக்காளர்களிடையே விழிப்புணர்வு: கையெழுத்து இயக்கம் தொடக்கம்!