ETV Bharat / state

ஊரடங்கில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்கள் - நிறுவனங்கள் மீது மகளிர் குழுவினர் புகார்

விருதுநகர்: ஊரடங்கின்போது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்துவதாகக் கூறி தனியார் நிதி நிறுவனங்கள் மீது மகளிர் குழுவினர் வட்டாட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.

virudunagar women self help group complaint against  Private financial institutions

author img

By

Published : May 22, 2020, 3:44 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு ஐம்பது நாள்களைக் கடந்துள்ள நிலையில் பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்ல அரசு சில தளர்வுகளை அளித்திருந்தாலும், ஏராளமானோர் வேலையின்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழுவினர் உடனடியாக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துமாறு தங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த கூடுதலாக 2 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் கிருஷ்ணவேணியிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உடற்பயிற்சி கூடங்களை திறக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.