விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அம்மாவட்டத்தில் முன்னதாக 11 ஆயிரத்து 644 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஆக. 20) மேலும் 147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 791ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 713ஆக அதிகரித்துள்ளது. மீதமுள்ள 916 பேர், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 162 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.