விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகேயுள்ள பாலத்தில் தென்காசியிலிருந்து மதுரைக்கு திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு தென்காசி நோக்கி திரும்பி வந்த வேனும், சிவகாசியை சேர்ந்தவர்கள் குற்றாலம் சென்றுவிட்டு சிவகாசி திரும்பிக்கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணம் செய்த ஐயப்பன், சுடலைமணி, முத்துக்குமார், அந்தோணிராஜ் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பிரபு என்பவர் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்ர். வேனில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை 3 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறை, காவல் துறையினர் போராடி மீட்டனர். நள்ளிரவில் விபத்து நடந்ததால் ராஜபாளையம் - தென்காசி சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: