விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, சிபிஎம், காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட்ஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டனர்.
இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட கல்வி அலுவலரிடம் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். இந்நிலையில், மாணவிகள் பயிலும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தியிடம் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
பின்னர், மாணவிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதற்காக தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள் மீது நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்' - இயக்குநர் அமீர்