ETV Bharat / state

கண்களைக் கட்டிக்கொண்டு 25 வித்தியாசமான செயல்கள்... சாதித்த பள்ளி மாணவி!

விருதுநகர்: கண்களைக் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட 25 வித்தியாசமான செயல்களைச் செய்து சாதனை படைத்துள்ள பள்ளி மாணவி ஹர்ஷ நிவேதாவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

school girl achieved the world record in yoga
author img

By

Published : Oct 25, 2019, 11:50 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஹர்ஷ நிவேதா என்ற 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு பயின்றுவருகிறார். யோகா செய்வதில் சிறுவயது முதலே அதிக நாட்டம் கொண்டவரான இவர், அதற்காக முறையான பயிற்சிகளை மேற்கொண்டு, உலக கின்னஸ் சாதனை, புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அச்சிவர்ஸ் போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று புதிய உலக சாதனையாக தன்னுடைய இரு கண்களையும் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், அப்துல் கலாம் ஓவியம் வரைதல், க்யூபை சரிசெய்தல், ஒன்றரைக் கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட 25 வித்தியாசமான செயல்களை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தார்.

கண்களைக் கட்டிக்கொண்டு ஓவியம் வரையும் ஹர்ஷ நிவேதா

இதன் மூலம் அவர், யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃபியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். சீனாவைச் சேர்ந்த சிறுவன் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரு கியூப் சரி செய்ததே உலக சாதனையாக இருந்து வந்தது. அதனை முறியடித்ததற்காக மாணவி ஹர்ஷ நிவேதாவிற்கு 'டேலண்ட் ஹிட் வேர்ல்டு ரெக்கார்டு' விருது வழங்கப்பட்டது.

கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் ஹர்ஷ நிவேதா

கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிஸ் இல்லாத பல சாதனைகளை செய்த மாணவி ஹர்ஷ நிவேதாவிற்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இது குறித்து மாணவி ஹர்ஷ நிவேதா பேசுகையில், "நான் செய்த இந்த சாதனை கண்பார்வையற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். என்னுடைய சாதனையை கண்பார்வையற்ற குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன். எதிர்காலத்தில் யோகாவை அனைவருக்கும் இலவசமாக கற்றுக்கொடுப்பதே என்னுடைய லட்சியம்" என்றார்.

இதையும் படிங்க: டெங்கு ஒழிப்பில் மும்முரம் காட்டும் சுகாதாரத்துறை!

Intro:விருதுநகர்
25-10-19

எதிர்காலத்தில் யோகவை கண்பார்வையற்றவர்களுக்கு இலவசமாக கொண்டு சேர்ப்பதே எனது குறிக்கோள் - சாதனை மாணவியின் ஆசை

Tn_vnr_02_school_girl_world_record_vis_script_7204885Body:உலகிலேயே முதன்முறையாக பள்ளி மாணவி ஒ௫வர் கண்ணைக் கட்டிக் கொண்டு 25 விதமான செயல்களை செய்து சாதனை. யோக கலை என்பது உடல் மற்றும் உள்ளம் இரண்டையும் வலிமையாக்கும். யோகாவின் மூலம் நோயற்ற வாழ்வு வாழ்வது மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இப்பள்ளி மாணவி. இவர் யோக கலையில் சிறுவயதில் ஏற்பட்ட நாட்டத்தின் காரணமாக தன்னுடைய நான்கு வயது முதல் உலகளவில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். இதன் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவி ஹர்ஷ நிவேதா(12) யோகக்கலையை சிறுவயது முதலே சிறப்பாக செய்துவந்த இவர் அதில் பல சாதனைகளையும் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர் யோகாவில் உலக கின்னஸ் சாதனை, புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ரெக்கார்ட்ஸ் அச்சிவர்ஸ் போன்ற பல சாதனைகள் செய்துள்ளார். இந்நிலையில் இன்று உலக சாதனையாக தன்னுடைய இரு கண்களையும் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு புத்தகம் வாசித்தல், அப்துல்கலாம் ஒவியம் வரைதல், பல்வேறு வடிவங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள க்யூப்பை (Quebec) சரிசெய்தல், கண்களை கட்டியபடியே 1 1/2 கிமீ தூரம் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட 25 வகையான செயல்களை 1 மணி நேரத்தில் செய்து யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதற்கு முன் சீனாவை சேர்ந்த சிறுவன் ஒ௫வன் கண்ணைக் கட்டிக் கொண்டு ஒரு கியூப் சரி செய்ததே உலக சாதனையாக இருந்துவந்தது. முதல் முறையாக இந்த சாதனை படைத்ததற்காக ஹர்ஷ நிவேதா டேலண்ட் ஹிட் வேர்ல்டு ரெக்கார்டு அவார்டு வழங்கப்பட்டது. கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இல்லாத பல சாதனைகளை செய்த மாணவி ஹர்ஷநிவேதாவிற்கு பாராட்டுமழை குவிந்து வ௫கிறது. இது குறித்து சாதனை மாணவி ஹர்ஷ நிவேதா கூறும்போது இந்த சாதனை கண்பார்வையற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. என்னுடைய இந்த சாதனையை கண் பார்வையற்ற குழந்தைகளுக்காக சமர்ப்பிக்கிறேன். மேலும் தன்னுடைய லட்சியம் எதிர்காலத்தில் யோகவை இலவசமாக அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே என்றார்

பேட்டி: ஹர்ஷ நிவேதா - மாணவிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.