விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் சிலர் பிழைப்பதற்காக உருவாக்கப்பட்டது. எந்த மதத்தைச் சேர்ந்த கடவுளையும் யாரும் இழிவுப்படுத்தக் கூடாது. அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.
அதிமுக அரசைத் தவறாகச் சித்தரித்து, மின்சாரத் துறையைக் குறை செல்ல திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் தகுதியில்லை. திமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மின்சார நிறுத்தம் குறித்து மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று சில நாள்களாக அதிகரித்துவருகிறது. சென்னை, பெங்களூரு ஆகிய மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களால்தான் தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மருத்துவர்கள், செவியலியர், காவலர்கள் என அனைவரும் இரவு பகலாக உழைக்கிறார்கள். கரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் மக்களிடையே பீதியை கிளப்பக் கூடாது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்