விருதுநகர், கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை 9) விருதுநகரில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், விருதுநகர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால், சிலப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததோடு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது.
விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், அல்லம்பட்டி, சூலக்கரை, மல்லாங்கிணறு, சத்திரரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானது. இதனால், விருதுநகர் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் இளைஞர் உயிரிழப்பு - கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை