ETV Bharat / state

அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணித்த மக்கள்! - மக்களவைத் தேர்தல் 2019

விருதுநகர்: பி.மீனாட்சிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராத காரணத்தினால், தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணித்துள்ளனர்.

virudhunagar people boycott the election
author img

By

Published : Apr 18, 2019, 4:06 PM IST

விருதுநகர் அருகே பி.மீனாட்சிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராத காரணத்தினால் விருதுநகர் மக்களவைத் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து பல வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேர்தலைப் புறக்கணிப்பது மிகவும் தவறான காரியம் என்றும் உங்களது எதிர்ப்புகளை நோட்டாவின் மூலமும் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

Intro:Body:

அடிப்படை வசதி செய்து தராத காரணத்தினால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்த பொதுமக்கள்

விருதுநகர் அருகே பி.மீனாட்சிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராத காரணத்தினால் விருதுநகர் பாராளுமன்ற தேர்தலில் கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர் தொடர்ந்து பல வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேர்தலைப் புறக்கணிப்பது மிகவும் தவறான காரியம் என்றும் உங்களது எதிர்ப்புகளை நோட்டாவின் மூலமும் தெரிவிக்கலாம் என்றும் அறிவுரை வழங்கினார் அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஊர் பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தில் 450க்கு மேல் பொதுமக்கள் வசித்து வருவதாகவும் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக சாலை வசதி செய்து தர வேண்டி போராட்டம் நடத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து பலமுறை மனு கொடுத்துள்ளதாகவும் ஆனால் இதுநாள் வரையில் எந்தவித நடவடிக்கையும் அரசுத் தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் சாலை வசதி இல்லாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளதாகவும் கூறினார்கள் எனவே மாவட்ட ஆட்சியர் தங்களை சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் அது வரையில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்களிக்கப் போவதில்லை என வருத்தத்துடன் தெரிவித்து உள்ளனர் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி வாக்களிக்க செல்லாமல் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் மிகுந்த பரபரப்பாக உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.