விருதுநகர்: 23 ஆவது மாவட்ட ஆட்சியராக மேகநாதரெட்டி இன்று (ஜூன்.18) காலை பதவியேற்றார். பதவியேற்ற உடன் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்று வரும் பதினோறாம் வகுப்பு சேர்க்கை குறித்து ஆய்வு நடத்தினார்.
திருச்சுழி சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்திய அவர், அங்கு, 9 ஆம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அட்மிஷன் அளிக்க பள்ளி தலைமையாசிரியர் முன்வராததால், மாணவர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த ஆட்சியர் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், மாணவர்களுக்கு பதினோறாம் வகுப்பில் கல்வி பயில சேர்க்கை அளிக்குமாறும் உத்தரவிட்டார்.பின்னர்,மாணவ, மாணவியர்களிடம் உரையாடிய அவர், அனைவரும் நன்றாக படித்து, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: