ETV Bharat / state

தாயிடம் தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த மகன்! - தாயிடம் தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த மகன்

விருதுநகர்: தாயிடம் தவறாக நடக்க முயன்ற நபரை மகன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் கொலை கொலை Virudhunagar Murder Murder தாயிடம் தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த மகன் The son who murdered the mother who tried to abuse her
Virudhunagar Murder
author img

By

Published : Mar 26, 2020, 10:04 AM IST

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு தேவதானம் மாதா கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (36). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் அளித்தப் புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் சுந்தரம் மீது சேத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது, சுந்தரம் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் சுந்தரம் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். இதையறிந்த அந்தப் பெண்ணின் மகன் விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் சுந்தரத்தை தாக்கி பின் கால், முதுகு, முகம் போன்றப் பகுதிகளில் சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையிலான காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட சுந்தரத்தின் உடல்

மேலும் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆட்டோ ஓட்டுநர் கழுத்தறுக்கப்பட்டு கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.