விருதுநகர் மாவட்டத்தில், கடந்த மார்ச் 30ஆம் தேதி டெல்லி சென்று வந்த 13 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன் பிறகு இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள், வெளிநாடு சென்று வந்தவர்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஒரே நாளில் 6 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்தது.
அதன் பிறகு, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி 2 நபர்கள், ஏப்ரல் 24ஆம் தேதி 4 நபர்கள், ஏப்ரல் 25ஆம் தேதி 2 நபர்கள் என கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 25ஆக அதிகரித்தது. அதன் பிறகு நேற்று ஒரே நாளில் 7 நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
இதனால் விருதுநகர் மாவட்ட எல்லையில், தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வரும் நபர்களிடம் மாவட்ட எல்லையில் தீவிரப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. அவர்களில் யாரேனும் ஒரு நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது போல், சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா: சிகரெட் திருடனால் நீதிபதிக்கு வந்த சோதனை!