விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இக்கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அப்போது கோயிலில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இந்த கொடியேற்ற வைபவம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகின்ற 23ஆம் தேதியும், தேர்த்திருவிழா 24ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: உப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்