தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வேட்புமனு தாக்கல் தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து தொடங்கப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைகளும் மிகுந்த ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த வேட்புமனு தாக்கலானது டிசம்பர் 16 அன்று நிறைவுபெற்றது. இன்று சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.
இதையும் படிக்க: கவுன்சிலர் பதவிக்கு சீட்டு கொடுக்காமல் ஏமாற்றிய அதிமுக: உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஜினிகாந்த்...!