விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், சிப்பிபாறை கிராமத்தில் இராஜம்மாள் என்பவர் சொந்தமாக பட்டாசு ஆலை நடத்திவந்தார். அதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்தப் பட்டாசு ஆலையில் மார்ச் 20ஆம் தேதி வெடிபொருள் உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தென்காசி மாவட்டம் மைப்பாறையைச் சேர்ந்த இராணி (42), ஜெயபாரதி (45), பத்ரகாளி (33), வேலுத்தாய் (34), தாமரைச்செல்வி (32), தங்கம்மாள் (39), முருகைய்யா (49) ஆகிய ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த எட்டு பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 24) மேலும் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை தற்போது 11ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 7 பேர் பரிதாப உயிரிழப்பு!