விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, பந்தல்குடி, நரிக்குடி, பாலையம்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சமூக வனக் காடுகளில் மான்கள், முயல்கள், காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. போதிய மழை இல்லாததால் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு காடுகளில் வாழும் விலங்குகள் தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வருகின்றன.
தற்போது அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால் அதைத் உண்பதற்காக அதிக அளவு மான்கள் வருகின்றன. அவ்வாறு வரும்போது நாய்கள் தாக்கியும் வாகனங்களில் அடிபட்டும் அடிக்கடி காட்டு விலங்குகள் இறந்து விடுகின்றன.
இந்நிலையில் இன்று(அக்.26) அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் சாலையை கடக்கும் போது வாகனம் மோதி இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்த புள்ளிமானின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்து அங்கேயே அடக்கம் செய்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035ஆவது சதய விழா - ஆட்சியர் மரியாதை!