விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி பகுதியில் தங்க பாக்கியா பஞ்சு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த பஞ்சு ஆலையில் சுமார் 80க்கு மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் இரு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமனது.
இன்று கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த உத்தரவை மீறி தனியார் பஞ்சாலை செயல்பட்டு வந்ததால் இந்த தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.