விருதுநகர்: இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 1,595 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே 1,306 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், ஜூலை 9ஆம் தேதி மேலும் கர்ப்பிணிப் பெண் உட்பட 289 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 4,231 பேருக்கு கரோனா தொற்று உறுதி!
இதன் காரணமாக, இதுவரை 1,595 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இதுவரை 644 பேர் நோய்ப் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 941 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இத்தொற்றின் காரணமாக ஜூலை 9ஆம் தேதி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது வரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டு 10 பேர் உயிரிழந்துள்ளனர்.