உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த சூழ்நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் நோய்த்தொற்றானது வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் விருதுநகரில் ஏற்கெனவே 25 பேர் கரோனா நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், தற்போது மேலும் 7 பேர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சூலக்கரை, குல்லுசந்தை, கன்னிசேரிபுதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 7 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, 32 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு