ETV Bharat / state

'விருதுநகரில் சிதிலமடைந்து காணப்படும் புதிய பேருந்து நிலையம்' #Exclusive - New Bus Stand at Virudhunagar

விருதுநகர்: 27 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு வாராமல் சிதிலமடைந்து காணப்படும் புதிய பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதலமடைந்து காணப்படும் புதிய பேருந்து நிலையம்

author img

By

Published : Feb 14, 2020, 12:03 AM IST

விருதுநகரில் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இட நெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை காரணமாக, புதியப் பேருந்து நிலையம் கட்ட 1989-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது இருந்த மாவட்ட அலுவலர்கள் மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல், மக்கள் பயன்பாடு அதிகம் உள்ள பகுதி எது என்பதை ஆராயாமல் ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில், புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்தனர்.

1992ஆம் ஆண்டு ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தைக் கட்டினார்கள். ஆனால், பேருந்து மட்டும் தான் வந்தது மக்கள் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை. காரணம், புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி, பழைய பேருந்து நிலையத்திற்கு அல்லது நகருக்குள் அனைத்து நேரங்களிலும் செல்ல பேருந்து வசதி இல்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் சாலையில் மின்விளக்கு வசதியின்மை போன்ற காரணங்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்போ கேள்விக்குறியாக இருந்தது.

சிதிலமடைந்துக் காணப்படும் புதிய பேருந்து நிலையம்

மற்ற ஊர்களில் இருந்து வரும் பயணிகள் பேருந்தும், புதிய பேருந்து நிலையத்தில் நிற்பது கிடையாது. பேருந்தில் ஏறாதே எனப் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் கூறும் அளவிற்கு, இதன் தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது.

ஆகவே, இரவு நேரப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக, நகரின் முக்கியப் பகுதிகளுக்கு இயக்க வேண்டும். மேலும், புதியப்பேருந்து நிலையத்தை மீண்டும் மறுசீரமைப்பு செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: சுகாதாரமற்ற முறையில் மீன் வளர்ப்பு - ஈ டிவி பாரத்தின் நேரடி கள ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.