விருதுநகர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தற்கொலையில் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் தோப்பு தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவரது மகள் விருதுநகரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று (மே10) வீட்டில் மாணவி படித்துக் கொண்டிருந்த போது அவரது தாய் கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
தாய் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பொழுது தன்னுடைய மகள் தற்கொலையில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியுற்று கதறி அழுதார். இது குறித்து, மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அடிக்கடி செல்போனை பார்த்ததால் பெற்றோர் திட்டியதையடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கோவையில் மருத்துவ மாணவி தற்கொலை