விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆகாசம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் இன்று (செப்.04) திருமணம் நடைபெற்றுள்ளது.
இதற்கு இரு வீட்டார் சார்பில் நூதன முறையில், பொதுமக்களைக் கவரும் வண்ணம் அச்சடித்துள்ள திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி, பகிரப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகள் மிகவும் வித்தியாசமான முறையில் உள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அந்த திருமண அழைப்பிதழை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதிலும், “நீங்க பஸ் ஓடலனு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லனாலும் சரி பக்கத்து வீட்டுல பைக்கை கடன் வாங்கிட்டு வந்துருங்க. சாப்பாடுக்கு நடக்கறது, தாவுறது எல்லம் வைக்கனும் ஆசை ஆனால் பிரியாணி மட்டும் தான்.
மேலும் எல்லாம் சரி சரக்கு உண்டா? குடி குடியை கெடுக்கும் அதனால் கொஞ்சமா குடுச்சு கோங்க” என அந்த திருமண அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது பொதுமக்கள் மத்தியில் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க:தனிப்படை மருத்துவக்குழு சோதனையில் சிக்கிய திண்டுக்கல் போலி மருத்துவர் !