கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளன. இச்சூழ்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி மற்றும் இணையவழி மூலம் கற்பித்தல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி விருதுநகர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து நடப்பு கல்வி ஆண்டிற்கான 2 வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரை குறிப்பிட்ட பாடங்களுக்கு சிறப்பு மற்றும் தனித்திறமைகள் மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடங்களை நடத்தி அதை வீடியோ பதிவு செய்யும் பணி தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தொடங்கிவைத்தார். இந்த வீடியோ பதிவு முறையும் மாதம் இறுதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.