விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கட்டு விநாயகர் கோயில் தெருவில் அந்தோணிராஜ் என்பவர் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். கார்மெண்ட்ஸ் அருகே தனது பல்சர் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பகுதியில் நடந்து வந்த அடையாளம் தெரியாத இளைஞர் அந்தோணிராஜின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தோணிராஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இந்தியா- உஸ்பெகிஸ்தான் படைகள் கூட்டுப் பயிற்சி!