கரிசல் இலக்கியத்தின் பெருமையை மட்டுமின்றி, பல இளம் புதிய படைப்பாளிகளின் ஊக்குவிப்பாராக இருந்த எழுத்தாளர் கி.ரா., என்ற கி. ராஜநாராயணன் நேற்று முன்தினம் (மே.17) காலமானார். அதனைத் தொடர்ந்து, அவரது உடலைப் புதுச்சேரியிலிருந்து அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது, சாத்தூர் புற வழிச்சாலை படந்தால் சந்திப்பு சாலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சாத்தூர் கிளை சார்பில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது உரிய சமூகப் பாதுகாப்புடனும், தகுந்த இடைவெளியுடனும் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: கோவிட் -19 எண்ணிக்கையை மாநிலங்கள் மறைக்க கூடாது - மத்திய அரசு