ETV Bharat / state

ஜாமினில் வெளி வருகிறார் நிர்மலா தேவி!

விருதுநகர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை சிறையில் இருந்து நாளை ஜாமினில் வெளியே வருகிறார்.

நிர்மலா தேவியின் வழக்கறிஞர்
author img

By

Published : Mar 19, 2019, 10:41 PM IST

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்க உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, சில நிபந்தனைகளுடன் நிர்மலாதேவிக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்ககூடாது என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் நிர்மலா தேவிக்கு யாரும் ஜாமின் கொடுக்க முன்வரவில்லை. ஜாமின் கொடுக்கக் கூடாது என நிர்மலாதேவியின் உறவினர்கள் மிரட்டப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் நிர்மலாதேவியின் சகோதரர் ரவி, குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் ஜாமின் அளிக்க முன்வந்தனர். இவர்களின் உத்தரவாத கடிதங்களை ஏற்று விருதுநகர் மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி மும்தாஸ், நிர்மலாதேவியை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா தேவியின் வழங்கறிஞர் பசும்பொன் பாண்டியன், மதுரை சிறையில் இருந்து நாளை நிர்மலா தேவி ஜாமினில் வெளிவர உள்ளதாக தெரிவித்தார்.

விருதுநகர்
19-03-19

நிர்மலாதேவியின் சகோதரர் ரவி ஜாமின் பத்திரம் வழங்கியதை அடுத்து கடந்த 11 மாதமாக சிறையில் உள்ள நிர்மலாதேவி நாளை ஜாமீனில் விடுதலையாகிறார் - என வழங்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பேட்டி

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில்  கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு   மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது அங்கு அவருக்கு ஜாமீன் வழக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வழங்கிய ஜாமீனில் இரத்த சம்பந்தமான ஒருவரும் மற்றும் அவரது குடும்ப நண்பர் ஒருவரும் என இரண்டு பேர் 10 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்களை ஜாமீனுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபானி உத்தரவிட்டார்.

அதன்படி நிர்மலாதேவிக்கு ஜாமீனுக்காக 
ஜாமீன்தார்களாக  விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் நிர்மலாதேவி சகோதரர் ரவி, குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் பத்திரத்தை நீதித்துறை நடுவர் மும்தாஜ்  
ஏற்றுக் கொண்டதை அடுத்து விருதுநகர் நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது. எனவே நாளை மாலை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையாக உள்ளார்.

இதனை அடுத்து நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நிர்மலா தேவி விவகரத்தில் தமிழக ஆளுநர் உடனடியாக சந்தானம் தலைமையில் விசாரணை குழுவை  அமைத்த ஆளுநர் பொள்ளாச்சி பாலியல் விவகரத்தில் மெளனமாக இருப்பது ஏன் என வழங்கறிஞர் பசும்பொன்பாண்டியன் கேள்வி  ஏழுப்பினர் அதே போல் நிர்மலாதேவி பத்தரிக்கையாளர்களை சந்திக்க கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஜாமீன் வழங்கப்பட்டது எனவும் அவர் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் வசிக்காலம் என தெரிவித்த பசும்பொன்பாண்டியன் அதே சமயம் வழக்கு சம்பந்தமான விசாரனைக்கு நிர்மலாதேவி முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளதாக நிர்மலாதேவி வழங்கறிஞர் பசும்பொன் பாண்டியன்  தெரிவித்தார்.

TN_VNR_3_19_NIRMALA_DEVI_LAWYAR_PASUMPON_PANDIYAN_BYTE_7204885
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.