விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தாவர் மாரியப்பன் (85). இவர் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது ராமகிருஷ்ணாபுரம் அருகே முதியவர் சென்றபோது, அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி முதியவரின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:மண உறவைத் தாண்டிய காதல்: தந்தையை அடித்துக்கொன்ற மகன்!