விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெட்டியபட்டி பகுதியில் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் காணவில்லை என கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி, பொண்ணு பாண்டியன் இருவரும் இரண்டு சிறுமிகளிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததும், இதற்கு உடந்தையாக சங்கிலியின் தாயார் சீனியம்மாள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு சிறுமிகளை மீட்ட காவல் துறையினர் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சங்கிலி, பொண்ணு பாண்டியன் உடந்தையாக இருந்த தாய் சீனியம்மாள் ஆகிய மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.