விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரைந்தான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்குத் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து நீதிமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த போது நீதிமன்ற ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.
தனது கைப்பையில் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தனக்குத்தானே ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார். இதனைக் கண்ட நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக அவரது கையில் வைத்திருந்த தீப்பெட்டியை தட்டிவி்ட்டு மீட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர் காவல் நிலைய காவல் துறையினர் பாலகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கரைந்தான்பட்டியைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவர் வெட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து வருவதாகவும் இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ”கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மாணிக்கம் தாகூர்