சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள தனியார் இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஏற்பட்ட நீர் கசிவை சரி செய்வதற்காக காலை 10.30 மணிக்கு வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒருவர் 10 அடி பள்ளத்தில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். பணியின் போது எதிர்பாராதவிதமாக தொட்டியின் தடுப்பு சுவர் உடைந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்தவர் மாட்டி கொண்டார்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்து வீரர்கள், 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பல மணி நேரங்களாக மண் சரிவில் இருந்த அவருக்கு மூச்சுத்திணறலும், கால் பகுதியில் லேசான காயமும் ஏற்பட்டதால் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.